மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நாளை நிறுத்தம்

By SG Balan  |  First Published Oct 8, 2023, 11:23 AM IST

உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழையில் போதிய மழைப்பொழிவு கிடக்காததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்திருக்கிறது.


மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால், டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பை நாளை முதல் நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியள்ளனர்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதியில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழையில் போதிய மழைப்பொழிவு கிடக்காததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்திருக்கிறது.

Tap to resize

Latest Videos

கர்நாடக அரசும் காவிரி ஆற்றில் தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய தண்ணீரில் பாதியைக்கூட தராமல் இருப்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்குக் வற்றியிருக்கிறது. அணை கட்டப்பட்டு 90 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இவ்வளவு குறைவான அளவு நீர் வற்றியது இல்லை.

ஹமாஸ் - இஸ்ரேல் போர் மூண்டதால் மீண்டும் அப்படியே பலித்த நாஸ்டர்டாமஸ் கணிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட அதிகமான தண்ணீர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டு வருவதால் நீர்மட்டம் மளமளவெனக் குறைந்தது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து இதுவரை 91 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், டெல்டா பாசனத்திற்கான தணணீர் திறப்பதை நாளை முதல் நிறுத்த தமிழக நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது என அத்துறையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று (ஞாயிறு) காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 31.72 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 139 கன அடி தண்ணீர் வருகிறது. ஆனால், அணையில் இருந்து வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

ரஞ்சிதாவை பிரதமராக்கி பவரை பறிகொடுத்த நித்தியானந்தா! கைலாசாவை ரெண்டாக்கிய சிஷ்யைகள்!

click me!