
சென்னையில் தண்ணீர் லாரிகள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போரட்டத்தால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை பெருநகத்தின் 75 சதவிகித குடிநீர் தேவையை பூர்த்தி செய்பவை தண்ணீர் லாரிகள்…. எமன் வாகனம் என்ற அடைமொழி இருந்தாலும் பல லட்சம் மக்களின் தாகத்தை இவ்வாகனங்களே தணிக்கின்றன.
அண்மைக்கால விபத்துக்களை அடுத்து தண்ணீர் லாரிகள் இயக்கத்தில் பல்வேறு கெடுபிடிகளை போக்குவரத்து போலீசார் விதித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க அனுமதியின்றி நீர் எடுப்பதாக்க் கூறி அவ்வப்போது லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழக அரசைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பழைய மகாபலிபுரம் சாலை புறநகர் பகுதியில் சுமார் 1200க்கும் அதிகமான லாரிகள் குடீநீர் விநியோகம் செய்யாமல் நிறுத்தப்பட்டுள்ளதால், மருத்துவமனை, தொழில்நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.