எச்சரிக்கை: பாம்பன் இரயில் பாலத்தில் நடந்து சென்றால் கைது…

Asianet News Tamil  
Published : Nov 24, 2016, 09:55 AM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
எச்சரிக்கை: பாம்பன் இரயில் பாலத்தில் நடந்து சென்றால் கைது…

சுருக்கம்

இராமேசுவரம்

தடை செய்யப்பட்ட பாம்பன் இரயில் பாலத்தில் நடந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள், மீன்வர்கள் கைது செய்யப்படுவார்கள் என இரயில்வே பாதுகாப்புபடை பிரிவு காவலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இராமேசுவரம் தீவில் கடலில் அமைந்துள்ளது பாம்பன் இரயில் பாலம்.

சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, இதன் அழகை பார்த்து இரசிப்பர். இதில், ஒரு சில குறும்புக்கார சுற்றுலாப் பயணிகள், மீன்வர்கள் பாம்பன் இரயில் பாலத்தில் நடந்து சென்று செல்பி எடுப்பதும் வழக்கமான ஒன்றே. இதனால், ஆபத்துகள் ஏற்படுகிறது என்று சுற்றுலா பயணிகள் யாரும் இரயில் பாலத்தில் நடந்து செல்லக்கூடாது என ரெயில்வே போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனால், தடையையும் மீறி சுற்றுலா பயணிகள் சிலர் தொடர்ந்து இரயில் பாலத்தில் நடந்து செல்வது தொடர்ந்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில் பாம்பன் இரயில் பாலத்தில் புதன்கிழமை இராமேசுவரம் இரயில்வே பாதுகாப்பு படை பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் சேஷாத்ரி தலைமையிலான இரயில்வே பாதுகாப்பு படை பிரிவு காவலாளார்கள் சுற்றுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாலத்தில் நின்றுக் கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்த சில மீனவர்களை பாலத்தில் நின்று யாரும் மீன் பிடிக்கக்கூடாது என்றும் இது தடை செய்யப்பட்ட பகுதி என்றும் பாலத்தின் உள்ளே யாரும் வர அனுமதி கிடையாது என்றும் எச்சரிக்கை செய்தனர்.

மேலும் பாலத்தில் பராமரிப்பு பணிக்காக வந்த தொழிலாளர்களிடமும் சுற்றுலா பயணிகள் யாரும் இரயில் பாலத்தில் நடந்து வந்தால் உடனடியாக இரயில்வே பாதுகாப்பு படை பிரிவு காவலாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், சுற்றுலா பயணிகள் நடந்து வந்தால் அவர்களை இங்கு வரக்கூடாது என தெரிவித்து திருப்பி அனுப்புமாறும் கேட்டுக் கொண்டனர்.

அப்போது இரயில்வே பாதுகாப்புபடை பிரிவு காவலாளர் கூறியதாவது:– பாம்பன் இரயில்வே பாலம் பாதுகாக்கப்பட்ட தடை செய்யப்பட்ட பகுதி. சுற்றுலா பயணிகள், மீனவர்கள் உள்ளிட்ட யாரும் பாம்பன் இரயில் பாலத்தில் நடந்து செல்லக்கூடாது. பாலத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை தவிர யாரும் பாலத்தில் நடந்து செல்ல அனுமதி கிடையாது. ஒரு சில சுற்றுலா பயணிகள், மீனவர்கள் தடையை மீறி இரயில் பாலத்தில் நடந்து வருவதாக தொடர்ந்து புகார் வருகிறது.

தடையை மீறி பாம்பன் இரயில் பாலத்தில் நடந்து செல்பவர்கள் இரயில்வே பாதுகாப்பு படை பிரிவு காவலாளர்களால் கைது செய்யப்படுவார்கள். இரயில் பாலத்தில் நின்று கண்டிப்பாக செல்போனில் படம் பிடிக்கக் கூடாது. பாலத்தில் இரயில்கள் செல்லும் போது பயணிகள் இரயிலின் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்யக் கூடாது. படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்யும் இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலத்தில் இரயில்களை நிறுத்தவது ஆபத்தானது என்பதால் பாலத்தில் இரயில்கள் செல்லும்போது அபாய சங்கிலியை யாரும் இழுக்கக் கூடாது என்றும் பல்வேறு எச்சரிகைகளை அவர் விடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவா.? ஷாக்காகி நிற்கும் இல்லத்தரசிகள்
எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமா முடிங்க.. தமிழகத்தில் இன்று 5 முதல் 8 மணி நேரம் மின்தடை.!