
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஆரணயில் மாணவி ஒருவரும், கடலூரில் இளம் பெண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கன்னியாகுமரி அருகே சுவர் இடிந்து விழுந்து இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. அதுவும் வட கிழக்கு பருவ மழை தொடங்கிய பின்னர் மழையின் வேகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக நேற்று முன்தினம் முதல் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த கனமழையால் சென்னையில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெரக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து நித்யா என்ற மாணவி பர்தாபமாக உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பில்லாத்தொட்டி பகுதியில் சுவர் இடிந்து விழுந்து லதா என்ற பெண் உயிரிழந்தார்.
இதே போன்று கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை, மூலச்சல் ஆற்றன்கரையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஸ்ரீராம், சந்தேஷ் என்ற இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
இதனிடையே நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக தீயனைணப்பு நிலைய கட்டடம் இடிந்து விழுந்தது. ஏற்கனவே கட்டடம் மோசமாக இருந்த நிலையில் அண்மையில்தான் தீயணைப்பு நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. குறிப்பிடத்தக்கது.