
கிரிக்கேட்க வீரர் என்றால், விளையாட மட்டும் தான் தெரிய வேண்டுமா என்ன....நாங்க டான்ஸ் கூட போடுவோம் என புத்தாண்டை வரவேற்கும் மகிழ்ச்சியோடு, நடு ரோட்டில் குத்தாட்டம் போட்டுள்ளார் கிரிக்கெட் ஸ்டார் விராட் கோலி மற்றும் தவான்.
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் நீண்ட தொடர் வரும் ஜனவரி 5ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த போட்டி பிப்ரவரி 24ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில்,புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று தென்னாப்பிரிக்க நாடு முழுக்க வெகு விமரிசையாக இருந்தது.
தென்னாப்பிரிக்காவை பொறுத்தவரை நாட்டில் உள்ளூர் இசை குழுக்கள் அதிகமாக இருக்கின்றது.அற்புதமான இசையில் மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்....தன்னை மறந்து நடனம் ஆடுவதும் உண்டு....
இதனை தொடர்ந்து, கிரிக்கெட் ஜாம்பாவான்களான விராட் மற்றும் தவான் இருவரும், புத்தாண்டை வரவேற்கும் பொருட்டு நேற்று கேப் டவுனில் இருக்கும் ஒரு தெருவில் இது போன்று சாலையில் பாடுபவர்களை பார்த்துவிட்டு கோஹ்லியும் தவானும் நடனம் ஆடி இருக்கிறார்கள்.
இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.