
திருவண்ணாமலை
வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர்கள், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை இரவு காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.
"சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய கிராம உதவியாளர்களின் இந்தப் போராட்டம் அச்சங்கத்தின் மூன்றாம் கட்ட போராட்டம்.
முதல் கட்டமாக வந்தவாசி வட்டக் கிளை சார்பில், ஒரு நாள் காத்திருப்புப் போராட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கியது. இந்தப் போராட்டம் நேற்று மாலை வரை நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் எம்.தியாகராஜன், சா.முகம்மதுகனி, மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் பெ.அரிதாசு, யாசர்அராபத் உள்ளிட்டோர் போராட்டத்தினரை வாழ்த்திப் பேசினர்.
இந்தப் போராட்டத்தில் மாவட்டத் தலைவர் எம்.பிரபாகரன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஆறுமுகம், வட்டத் தலைவர் டி.ஜி.சுப்பிரமணியன், செயலர் ஜெ.ஆதம், பொருளாளர் எம்.கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.