விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்: தேமுதிக அறிவிப்பு

By SG Balan  |  First Published Dec 28, 2023, 10:47 PM IST

விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை வைக்கப்படும் என்று தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.


விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை வைக்கப்படும் என்று தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

நடிரும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனருமான விஜயகாந்த் வியாழக்கிழமை காலை காலமானார். அவருக்கு அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Latest Videos

கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த வெளியூர்களில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.

எதிர்கட்சித் தலைவர்கள் ஐபோன்களை ஹேக் செய்கிறதா மோடி அரசு? அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதில்

pic.twitter.com/kv9JlAwrVm

— Vijayakant (@iVijayakant)

இந்நிலையில், சென்னை தீவுத்திடலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இது குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று (28.12.2023) காலை 6.10 மணியளவில் மறைவு என்ற செய்தி தேமுதிகவிற்கும், திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் உடல் தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது.

கேப்டன் அவர்களின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலிருந்து மதியம் 1.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது."

இவ்வாறு தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பிச்சைக்காரர்கள் கொடுத்த ரூ.4.5 லட்சம் நன்கொடை!

click me!