நீட் தேர்வு விவகாரம்: பிரதமர் மோடியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு

 
Published : Aug 02, 2017, 02:01 PM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
நீட் தேர்வு விவகாரம்: பிரதமர் மோடியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு

சுருக்கம்

vijayabaskar meets modi regard neet

தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்களவை துணை தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது, தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, நீட் தேர்வு நடத்தப்பட்டும் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.

தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று கோரி வருகிறது.  மாநில பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்காமல் இருக்கும் வகையில் 85 சதவீத உள் ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையும் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்களவை துணை தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க முடியாவிட்டாலும், தற்காலிகமாக விலக்கு அளிப்பதற்கான சட்ட முன் முடிவை மத்திய அரசிடம், தமிழக அரசு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

நான் 2026 ல் போட்டியிட மாட்டேனா ? விஜய்யை நிற்க வைத்து கேளுங்கள் - சரத்குமார் பேட்டி
20 மாவட்டங்களில் 60 அரசு பள்ளிகளில்! பள்ளிக்கல்வித்துறையில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்!