
TVK Vijay Next Move : தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதில் விசிக இழுபறி செய்து வருவதால், தவெக தலைவர் விஜய் தன் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், ஆட்சி அமைப்பதில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. மொத்தம் 234 தொகுதிகளைக் கொண்ட சட்டசபையில், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. தவெக-வுக்கு தற்போது 108 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2 இடங்கள்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2 இடங்கள்), மற்றும் காங்கிரஸ் (5 இடங்கள்) ஆகியவை ஏற்கனவே தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன.