
சமூக வலைதள பிரபலமும் பொதுசேவையில் ஈடுபாடும் கொண்டவருமான வைஷ்ணவியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி கோவையில் பல்வேறு பொது சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தவெக கட்சியின் நிர்வாகிகளின் ஒருவராக இருந்த இவர், கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு, அந்தச் செயல்களை வீடியோவாக இணையத்தில் பகிர்ந்து வந்தார்.
தவெகவிலிருந்து விலகல்
பிறகு வைஷ்ணவி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். மேலும், வைஷ்ணவியின் தாய் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவில் இணைந்த வைஷ்ணவி
வைஷ்ணவி தவெகவிலிருந்து விலகிய பிறகு, சமூக வலைத்தளங்களில் அவர் தவெக கட்சி மற்றும் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் கேள்வி எழுப்பி வருகிறார். இதனால் தவெக மற்றும் விஜய் ஆதரவாளர்களுடன் மோதல் போக்கு தொடர்ந்து ஏற்பட்டு வந்தது.
கார்த்திக் கொலை மிரட்டல்
சமீபத்தில், வைஷ்ணவிக்கு எதிராக தவெக ஆதரவாளர் கார்த்திக், சமூக வலைதளத்தில் பகிரங்கமாக மிரட்டலை விடுத்துள்ளார். “ஒரு சில பெண்களைப் பார்த்தால் மட்டும் கண்டம் துண்டமாக வெக் கொ செய்யத் தோன்றும்” என அவர் பதிவிட்டுள்ளார்.
கார்த்திக் கைது
இந்தக் கொலை மிரட்டல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. போலீசார் சம்பவத்தை தீவிரமாக விசாரித்து, வைஷ்ணவிக்கு எதிரான கொலை மிரட்டலை விடுத்த கார்த்திக்கைக் கைது செய்தனர்.