காரில் ரூ. 40 லட்சம்..கட்டுகட்டாக 500 ரூபாய் நோட்டுகள்.. ஸ்கெட்ச் போட்டு டைம் பார்த்து தூக்கிய விஜிலென்ஸ்..

Published : Mar 30, 2022, 06:40 PM IST
காரில் ரூ. 40 லட்சம்..கட்டுகட்டாக 500 ரூபாய் நோட்டுகள்.. ஸ்கெட்ச் போட்டு டைம் பார்த்து  தூக்கிய விஜிலென்ஸ்..

சுருக்கம்

திருச்சி மாவட்ட துணை ஆட்சியரின் காரில் கணக்கில் வராத ரூ.40 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்து, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ஆதி திராவிடர் நலத்துறை துணை ஆட்சியராக பணியாற்றி வருபவர் சரவணக்குமார். இந்த துறையின் காலியாக உள்ள சமையலர், இவரது ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பணி உள்ளிட்ட பல்வேறூ பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.இதனிடையே இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு திருச்சி பகுதியில் லஞ்சம் வசூலிக்கப்பட்டு, அந்த பணம் திருச்சியிலிருந்து சென்னைக்கு காரில் கொண்டு செல்லப்படவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து லஞ்ச ஊழல் தடுப்பு போலீச்சர் தங்கள கண்காணிப்பு வளையத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்று மதியம் ஆதிதிராவிட நலத்துறை ஆணையர், லஞ்சமாக வசூலிக்கப்பட்ட பணத்துடன் காரில் திருச்சியிலிருந்து சென்னை செல்வதாக விழுப்புரம் விஜிலென்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான தனிப்படை, விழுப்புரம் மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எல்லையான மடப்பட்டு பகுதியில் அந்த கார் நுழைந்தபோது , கண்காணிப்பில் இருந்த போலீசார் காரை மடக்கி பிடித்தனர்.

இதனையடுத்து கார் முழுவதும் சோதனையிட்டதில், ஒரு கட்டை பையில் கட்டுகட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அதனை பறிமுதல் செய்தனர். பணம் குறித்து காரில் இருந்த துணை ஆட்சியர் சரவணக்குமார் மற்றும் ஓட்டுநர் மணி ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் விழுப்புரம் ஆட்சியர் அலுவகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

முதற்கட்ட விசாரணையில், காரில் மொத்தம் 40 லட்சம் ரொக்கம் இருந்ததும், இதனை திருச்சியிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் கணக்கில் வராத பணத்தை எடுத்து வந்ததால் ரூ.40 லட்சம் ரொக்கமும், கார் லஞ்ச ஒழிப்பு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பணம் யாருக்கு..? எதற்காக .?  எனும் கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள், துணை ஆட்சியரின் காரிலிருந்து கட்டு கட்டாக பணம் எடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.18 கோடி வரி செலுத்துங்கள்..! பிரியாணி மாஸ்டரை அதிர வைத்த ஜி.எஸ்.டி நோட்டீஸ்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!