குடிபோதையில் ஆபாசமாக பேசினால்..இறக்கிவிட கூடாதா ? நரிக்குறவர் இறக்கிவிடப்பட்ட விவகாரத்தில் திருப்பம்

By Raghupati R  |  First Published Dec 12, 2021, 7:55 AM IST

நாகர்கோவில் அருகே அரசு பேருந்தில் பயணித்த நரிக்குறவர் குடும்பத்தினரை பாதிவழியிலியே இறக்கிவிட்ட வீடியோ வைரலானதை அடுத்து, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அதுகுறித்து தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார் பேருந்து நடத்துனர்.


நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் நாள்தோறும், நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள் பயணிப்பது வழக்கம். அதன்படி, நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட பேருந்தில் சிறுவன் உட்பட 3 பேர் கொண்ட நரிக்குறவர் குடும்பத்தினர் பயணித்துள்ளனர். அப்போது, பேருந்தின் நடத்துனர் அவர்களை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கி விட்டுள்ளார். நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் வெளியிட்ட அறிவிப்பில் ''தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் திருவட்டார் கிளை பேருந்து எண் TN 74 N1802, டிசம்பர் 9 அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி புறப்பட்டது. 

இந்த பேருந்தில் ஓட்டுநர் நெல்சன் மற்றும் நடத்துனர் ஜெயதாஸ் பணியில் உள்ளனர். இந்த பேருந்தில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த ஒரு வயதான ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை ஏறியுள்ளனர். பேருந்து வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது மேற்படி பயணிகள் மூவரையும் பேருந்திலிருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இறங்கிவிட்டதாக தெரிகிறது. 

இந்நிகழ்வை அருகில் உள்ள பேருந்து நிலைய காப்பாளர்களிடம் தெரிவிக்காமல் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தன்னிச்சையாக செயல்பட்டு உள்ளனர். பேருந்து நிலையத்தின் வெளியே நின்று கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் இதனை வீடியோ எடுத்து ஒளிபரப்பு செய்த பின்னரே இந்நிகழ்வு நிர்வாகத்திற்கு தெரிய வருகிறது. எனவே பொறுப்பற்ற முறையில் பணி செய்து அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு பேருந்து நடத்துனர் வீரமணி கூறுகையில், கடந்த 9ஆம் தேதி திருப்பூர் செல்வதற்காக உடுமலையிலிருந்து ஐந்து பேர் பத்துக்கும் மேற்பட்ட மூட்டைகளுடன் அரசு பேருந்தில் ஏறிய நிலையில் அரசு பேருந்து போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்படியும், நடத்துனர் என்கிற முறையில் துணி மூட்டையா? என்று கேட்டபோது குடிபோதையில் இருந்து ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்னிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் பேருந்தில் இருந்தவர்கள் அறிவுறுத்தல்படி நான் கீழே இறங்கிய நிலையில் தொடர்ந்து அவர்கள் குடிபோதையில் என்னை தகாத வார்தைகள் பேசிச் சண்டையிட்டார்கள். 

இதே அவர்களுடன் வந்த ஓருவன் வீடியோ எடுத்து கொண்டு இருந்தான். பின்னர் சிறிது நேரம் கழித்து நான் அரசு பேருந்தை எடுத்து விட்டு திருப்பூருக்கு சென்று விட்டேன். இதற்கிடையில் தற்போது இரண்டு நாட்கள் கழித்து அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது. ஆகையால் என் மீதும் அரசு போக்குவரத்து கழகம் மீது அவதூறு பரபரப்பிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.

click me!