மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னை வருகை... நடிகர் சங்க நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு

 
Published : Apr 23, 2017, 09:38 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னை வருகை... நடிகர் சங்க நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு

சுருக்கம்

venkaiah naidu meeting actor association

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு திடீரென சந்தித்து பேசியுள்ளார்.

தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. கோட்டையை எடப்பாடி அணியே தக்கவைக்குமா? அல்ல ஓ.பி.எஸ்.டீம் கைப்பற்றுமா என்பதில் அத்தனை தகிப்பு நிலவி வருகிறது. 

விவசாயிகளுக்கு ஆதரவாக  திமுக அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இப்படி ஒருபுறம் அரசியல் அனல் காற்று சுழன்றடிக்க மறுபுறம் திமுகவின் முழு அடைப்பு போராட்டம் என தமிழகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பரபரப்புடன் விறுவிறுப்புடனுமே காணப்படுகிறது. 

இந்த பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் உச்சமாக தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு திடீரென சந்தித்து பேசியுள்ளார்.  அப்போது திருட்டு டிவிடி ஒழிப்பு குறித்த மனுக்களை நடிகர்  சங்க நிர்வாகிகள் அளித்ததாகக் கூறப்படுகிறது.மத்திய அமைச்சருடனான  இச்சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன், விஷால் ஆகியோர் பங்கேற்றனர்.

நம் நாட்டில் விவசாயிகளைத் தவிர்த்து அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளும் எளிதாக நிறைவேற்றப்படுவது காலத்தின் கொடுமை.

PREV
click me!

Recommended Stories

காங்கிரஸ்க்கு கிரீன் சிக்னல் கொடுத்த விஜய்..? போனிலேயே நடந்து முடிந்த டீல்.. கலக்கத்தில் திமுக
அதிமுக விருப்ப மனுவுக்கு ரூ 18 லட்சம் பணம் கட்டிய நபர்..! 120 தொகுதிகளில் எடப்பாடி போட்டியிட மனு