
வேலூரில் தனியார் பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பாக்கியராஜ் என்ற தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
காட்பாடி அடுத்த கோரந்தாங்கலில் தனியார் பள்ளி ஒன்று வகுப்பு விரிவாக்கத்திற்காக புதிய கட்டிடம் ஒன்றை கட்டி வந்தது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே அக்கட்டிடச் சுவரின் ஒரு பகுதி சீட்டுக் கட்டு சரிவதைப் போல இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த 14 பேர் சிக்கிக் கொண்டனர்.
பல மணி நேரம் நடைபெற்ற மீட்பு பணியில் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பாக்கியராஜ் என்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காட்பாடி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.