"வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை" - வானிலை ஆய்வு மையம் தகவல்

First Published Apr 13, 2017, 4:38 PM IST
Highlights
a new cyclone formed in bay of bengal


தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதியில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவிதுள்ளார்.

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், தமிழகத்தை பொறுத்தவரை இன்று வேலூர் தருமபுரி சேலம் கோவை உள்ளிட்ட பல  இடங்களில் 4௦ டிகிரி  செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்தவுடன் 1 அல்லது 2  டிகிரி  வெப்பம்   தமிழகத்தில்  அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு  மையம்   தெரிவித்துள்ளது.

click me!