மனைவி கழுத்தறுத்து கொலை! தலையில் கல்லைப்போட்டு கணவன் வெறிச்செயல்!

 
Published : Mar 05, 2018, 12:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
மனைவி கழுத்தறுத்து கொலை! தலையில் கல்லைப்போட்டு கணவன் வெறிச்செயல்!

சுருக்கம்

Vellore near young woman murder police investigation

மனைவியின் கழுத்தை அறுத்து, தலையில் கல்லைப் போட்டு விட்டு தப்பியோடிய கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே தட்டப்பாறை சின்னாலப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (33). ஆட்டோ ஓட்டி வந்த இவர், உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்போது விவாசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது மனைவி வட்ளளி (29). இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு துளசி (9) என்ற மகளும், திலீப் (7) என்ற மகனும் உள்ளனர். அங்குள்ள அரசு பள்ளியில் துளசி 4 ஆம் வகுப்பும், திலீப் 2 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பாக மகன் பிரபுவுக்கு தலையில் கட்டி ஏற்பட்டது. அதனை அகற்ற அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. கணவ-மனைவி இடையே இது தொடர்பாக தகராறு எழுந்ததாக கூறப்படுகிறது. 

இவர்கள் சண்டையினால், குழந்தைகள் இருவரும் மாலையில் பாட்டி வீட்டுக்கு சென்று அடுத்த நாள் காலை வீட்டுக்கு வருவார்கள். இந்த நிலையில், நேற்று பாட்டி வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய குழந்தைகள், தாய் வள்ளி இறந்த கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையின் அழுகுரலைக் கேட்ட அக்கம்பக்கத்தவர், சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பின்னர், அவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வள்ளியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வள்ளியின் கணவர் பிரபுவை தேடி வந்தனர்.

தப்பியோடிய பிரபுவை கண்டுபிடித்த போலீசார், கொலைக்காரண காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நெஞ்சை உருக்கும் சோகம்..! அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து 7ம் வகுப்பு மாணவன் பலி..!
செங்கோட்டையனுக்கு சின்ன சங்கடமோ, மரியாதை குறைவோ வந்துடக்கூடாது..! புஸ்சியிடம் விஜய் போட்ட உத்தரவு