பாமக எளிய மக்களுக்காகப் போராடுகிற கட்சி: திருமாவளவன் நம்பிக்கை

Published : Jun 30, 2025, 08:54 PM IST
Ramadoss - Thirumavalavan

சுருக்கம்

அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறுவது குறித்து திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான உறவு குறித்தும் கருத்து தெரிவித்தார்.

அ.தி.மு.க.வை எந்த சக்தியாலும் கைப்பற்ற முடியாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுவது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான உறவு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது:

"அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது" என்ற கருத்தைச் சொல்லும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "யார் கபளீகரம் செய்ய முயற்சிக்கின்றனர்" என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

பாசம் - பொறுப்பான வார்த்தை

"திருமாவளவனுக்கு ராமதாஸ் மீது திடீரென என்ன பாசம்?" என அன்புமணி கேட்கிறார். பாசம் என்பது ஒரு வலிமையான வார்த்தை. நாங்கள் குறிப்பிட்டது அந்த அடிப்படையில் அல்ல. தந்தைக்கும் மகனுக்கும் இடையே இடைவெளி பெரிதாகி விடக்கூடாது என்ற அடிப்படையில் சொல்லப்பட்ட ஒரு பொறுப்பான வார்த்தை அவ்வளவுதான். தந்தைக்கு இருக்கும் அனுபவம், ஆளுமையை அன்புமணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எளிய மக்களுக்காகப் போராடுகிற கட்சி

பா.ம.க. இங்கே எளிய மக்களுக்காகப் போராடுகிற கட்சி என்று நம்புவதால், அவர்களுக்கு இடையே இடைவெளி ஏற்பட்டு விடக்கூடாது. அந்த இடைவெளியைப் பயன்படுத்தி பாசிச சக்திகள் உள்ளே நுழைந்து விடக்கூடாது. சனாதன சக்திகள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள். எச்சரிக்கையாக இருங்கள்.

இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை