பானை சின்னம் கோரி விசிக மேல்முறையீடு!

By Manikanda PrabuFirst Published Mar 28, 2024, 11:27 AM IST
Highlights

பானை சின்னம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேல்முறையீடு செய்துள்ளது

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக உள்ளது. அக்கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் விசிக போட்டியிட்டது. அதில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பானை சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் விசிக வேட்பாளர்கள் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

Latest Videos

வயநாட்டில் ராகுல் காந்தி ஏப்ரல் 3ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல்!

எனவே, எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால், அதனை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இதனை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இதனை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மக்களவை தேர்தலில் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்ய முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் உறுதியாக தெரிவித்து விட்டது. இதனை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில், பானை சின்னம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேல்முறையீடு செய்துள்ளது. இரு தொகுதிகளில் ஒரு கட்சி வேட்பாளரை நிறுத்தினால் அக்கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதே விதி என அந்த மனுவில் விசிக குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று பிற்பகலில் விசாரிக்கப்பட உள்ளது.

click me!