ஜனவரி 14 ஆம் தேதியை பொங்கல் தினமாக அறிவித்து பெருமைப்படுத்திய  வர்ஜீனியா !!       உலக தமிழ் மக்கள் உற்சாகக் கொண்டாட்டம் !!

 
Published : Jan 07, 2018, 07:23 AM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
ஜனவரி 14 ஆம் தேதியை பொங்கல் தினமாக அறிவித்து பெருமைப்படுத்திய  வர்ஜீனியா !!       உலக தமிழ் மக்கள் உற்சாகக் கொண்டாட்டம் !!

சுருக்கம்

varginia annouced Jan 14 as pongal day

உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் வகையில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வர்ஜீனியாவில் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான  செய்தியை வர்ஜீனியா பொதுச் சபை அறிவித்துள்ளது.

தைத் திருநாள் என்றாலே தமிழகர்ளின் வாழ்விலும், ரத்தத்திலும் உற்சாகம் பொங்கும் ஒரு நாளாக விளங்கி வருகிறது. உலகம் எங்கிலும் பரந்து, விரிந்து வாழும் தமிழர்கள் தைத் திருநாளை ஒவ்வொரு ஆண்டும் எற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை வர்ஜீனியா அதிகாரப்பூர்மாக அங்கீகரித்துள்ளது.

உலகத்தின் மிகப்பழமையான ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்றும் தொடர்ந்து இயங்கி வரும் சட்டசபை என்ற பெருமை உடைய வர்ஜீனியா பொதுச்சபையில் ஜனநாயகக்கட்சி, பிரதிநிதி டேவிட் புலோவா, பொங்கல் திருநாளை அங்கீகரிப்பது தொடர்பாக கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தின்படி, இந்த ஆண்டு முதல் (2018)  ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் திருநாளாக  வர்ஜீனியா காமன்வெல்த்தால் அங்கீககரிக்கப்பட்டுள்ளது. இனி வரும் ஆண்டுகளில் அங்கு பொங்கல் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்படும்.

வர்ஜீனியா பொதுச்சபையில் இத்தீர்மானத்தினை முன்மொழிந்த பிரதிநிதி புலோவா, பொங்கல் திருநாளுக்கும் நன்றி தெரிவிக்கும் ( thanks Giving) திருநாளுக்கும் உள்ள ஒற்றுமைகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.

கோடிக்கணக்கான தமிழர்கள் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ் மக்களுக்கு இத்திருநாள் எத்தனை  சிறப்பானது என்பதை எடுத்துரைத்தார்.

செனட் மற்றும் சபையின் பணிக்குழு உறுப்பினர்கள் புலோவா அளித்த விளக்கத்தையும்,   பழம்பெரும் தமிழ்ப் பண்பாட்டு மரபைப் பெரிதும் வியந்து, தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினர்.

ஜனவரி 14ம் நாள் பொங்கல் திருநாளாக அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதை, தமிழ்-அமெரிக்க மக்கள் வர்ஜீனியாவுக்கும், அமெரிக்கத் திருநாட்டுக்கும் அளித்து வரும் சமுதாய, பொருளாதார, அரசியல் பங்களிப்புகளை, வர்ஜீனியா அரசாங்கம் அங்கீகரித்திருக்கும் ஒரு சிறப்பான தருணமாகக் கருதப்படுகிறது.

நீண்ட நெடிய தமிழ் மரபை நினைவு கூர்ந்து, தமிழ் மொழியையும், பண்பாட்டையும் அமெரிக்காவில் கொண்டாடி, எதிர்வரும் தலைமுறைகளுக்கு அவற்றை முன்னெடுத்துச் செல்லக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக வர்ஜீனியா வாழ் தமிழர்கள் இதை கருதுகிறார்கள்.

 

 

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!