சென்னையை நெருங்குகிறது வர்தா புயல்.. - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Asianet News Tamil  
Published : Dec 11, 2016, 04:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
சென்னையை நெருங்குகிறது வர்தா புயல்.. - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சுருக்கம்

வர்தா புயல் சென்னையை நெருங்கி வருவதால் பொதுமக்கள் நாளை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுகொள்ளபட்டுள்ளது.

சென்னை அருகே 450கிமீ தூரத்தில் மையம் கொண்டிருந்த வர்தா புயல் 370கிமீ தூரத்தில் சென்னையை நோக்கி விரைவாக வந்து கொண்டிருக்கிறது.

இந்த புயல் நாளை மதியம் சென்னை அருகே கரையை கடக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலின் தொடக்கமாக சென்னையில் பலவேறு இடங்களில் தற்போது தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது.

கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இன்று மாலை முதல் அதிவேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுகொள்ளபட்டுள்ளனர்.

சென்னை கடலூர் நாகையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் புயல் காற்று வீசக்கூடும் என்பதால் அங்கு பேரிடர் மீட்பு குழு அனுப்பபட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூரில் நில அதிர்வு.. பீதியில் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!
தைப்பூசம்.. திருச்செந்தூர் போறீங்களா? சென்னை டூ நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்!