நாளை கரையை கடக்கிறது வர்தா புயல் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

First Published Dec 11, 2016, 11:09 AM IST
Highlights


வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் நாளை மதியம் சென்னை அருகே கரையை கடக்கும் என்றும் அப்போது 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சத்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள அதி தீவிர வர்தா புயல்  இன்று காலை நிலவரப்படி சென்னையில் இருந்து 450 கிலோமீட்டர் துரத்தில் மையம் கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து  நாளை மதியம் தெற்கு ஆந்திரா மற்றும் சென்னை அருகே கரையை கடக்கும் என் எதிர்பார்க்கம்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை முதல் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் புயல் கரையை கடக்கும் போது 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

வர்தா புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் இன்று மாலை 3 மணிக்கு தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. புயல் கரையை கடக்கும்போது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது 

click me!