
வர்தா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து முதல்வர் ஓபிஎஸ், உயர்திகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வங்ககடலில் உருவாகியுள்ள வர்தா புயல் சென்னை அருகே நாளை கரையை கடக்கும் என அறிவிக்கப்ட்டுள்ளதால் 100கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலை எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஓபிஎஸ் உயரதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கனமழை பெய்தால் மீட்பு பணிகளில் ஈடுபட 108 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
குடிநீர்,உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 176 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
காற்றில் வேரோடு சாயும் மரங்களை அப்புறப்படுத்த 45 அறுவை மெஷின்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பலத்த காற்று வீசும்போது மின்சாரம் தொடர்பான பிரச்சனை ஏற்படும் என்பதால் மின்வாரிய ஊழியர்கள் உஷார்படுத்தபட்டுள்ளனர்.
மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுரங்க பாதைகளில் தேங்கும் நீரை அப்புறபடுத்த 622 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.
பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 80 பேர் எட்டு குழுக்களாக பிரிந்து பணியாற்ற தயார் நிலையில் உள்ளனர்.
உணவு தயாரிப்பதற்காக 4 சமையல் கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.