வண்டலூர் ஸ்பெஷல்…. இனி விலங்குகளை ஆன்-லைனில் பார்க்கலாம்.. இரவில் தங்கலாம்….

First Published Apr 15, 2018, 11:13 AM IST
Highlights
vandalur park will be seen in online and stay in night there


சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டு களிக்கும் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. மேலும் பூங்காவில் இரவில் தங்கி பார்க்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை காண ஆண்டுக்கு 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை  வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் அதிக அளவில் பார்வையாளர்கள் வருகிறார்கள். அதே நேரத்தில்  வர வாய்ப்புகளற்ற பார்வையாளர்களும் உள்ளனர்.

இவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் பூங்கா நிர்வாகம் ஆன்-லைன் மூலம் Live Str-e-a-m-i-ng என்னும் புதிய வசதியை தமிழ் புத்தாண்டு தினமான நேற்று முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி சிங்கம், காட்டு மாடு, மனித குரங்கு, சிங்கவால் குரங்கு ஆகிய 4 விலங்குகளை மட்டும் தற்போது ஆன்-லைன் மூலம் காணமுடியும் ஓரிரு நாட்களில் யானை, வெள்ளைபுலி, வங்கபுலி, சிறுத்தை, முதலைகள், நீலகிரி கருங்குரங்கு, கரடி, நீர்யானை உள்பட 16 விலங்குகளை மற்றும் அதன் செயல்பாடுகளையும் நேரடியாக ஆன்-லைன் மூலம் பொதுமக்கள் காணலாம். இந்த வசதி பூங்காவின் www.aazp.in இணையதளத்தில் காணமுடியும்.

இது தவிரி பூங்காவில் இரவில் தங்கி பகலில் பூங்காவை சுற்றிப்பார்க்கும் புதிய வசதியும்  நேற்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான முன்பதிவுகளை பூங்காவின் இணையதளம் (www.aazp.in) மற்றும் https://www.aazp.in/ro-om_sea-r-ch/ என்ற இணைப்பின் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். இதன் மூலம் வரும் பார்வையாளர்கள் மாலை 6 மணிக்கு பூங்காவின் ஓய்வு விடுதிக்கு வந்து, இங்கு இரவு தங்கி, மறுநாள் காலை 9 மணிக்கு மின்கல ஊர்தி மூலம் பூங்காவை சிறப்பான முறையில் கண்டுகளிக்கலாம்.

பின்னர் சிங்கம் மற்றும் மான் உலாவிடத்தை காணவும் முடியும். இந்த வசதி மூலம் அவர்கள் சுலபமாக பூங்காவையும் அதில் உள்ள விலங்குகளையும் கண்டுகளிக்க நல்ல வாய்ப்பாக அமையும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது..

இதற்கு இரு பெரியவர்கள் தங்க ரூ.2,000 மற்றும் வரியும், கூடுதலாக தங்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.500 மற்றும் வரியும் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

click me!