
வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு கயத்தாறில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு, வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பேசிய அவர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
மேலும், மக்கள் நல கூட்டணி சார்பில், மத்திய அரசை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் விநாயகா ரமேஷ், மாநில இளைஞர் அணி ராஜேந்திரன், உள்பட மதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.