
தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனல் மின் நிலையத்தின் 5வது பிரிவு கொதிகலனில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இந்த பணியில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 5வது கொதிகலன் திடீரென வெடித்து சிதறியது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
படுகாயமடைந்த 2பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.