"ONCG வாகனங்கள் வெளியேறாவிட்டால் அடித்து நொறுக்குவோம்" - வைகோ பகிரங்க அறிவிப்பு!!

First Published Aug 13, 2017, 12:26 PM IST
Highlights
vaiko warning ongc vehicles


கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. வாகனங்கள் வெளியேற வேண்டும் என்றும், அப்படி வெளியேறாவிட்டால் அந்த வாகனங்களை அடித்து நொறுக்குவோம் என்றும் மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கச்சாண் எண்ணெய் குழாயில் கசிவு காரணாக விளைநிலங்கள் பாழாவதாக பொதுமக்கள் போராடி வருகின்றனர்.

தஞ்சை, கும்பகோணம் அருகே தாராசுரத்தில், வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. வாகனங்கள் வெளியேற வேண்டும் என்று கூறினார்.

அப்படி வெளியாறாத வாகனங்களை அடித்து நொறுக்குவேன் என்றும் தமிழகத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற பாடுபடுவேன் என்றும் வைகோ கூறியுள்ளார்.

ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கூறுவதுபோல், கதிராமங்கலத்தில் போராட்டத்தை நான்தான் தூண்டிவிடுகிறேன். என் மீது வழக்குபோட்டால் அதை எதிர்கொள்வேன் என்றும் கூறினார். 

தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடி வரும் பெண்கள், ஓ.என்.ஜி.சி.க்கு எதிராகவும் போராடுவார்கள் என்றும் வைகோ கூறியுள்ளார்.

click me!