
ஈழத்தமிழர் இனப்படுகொலையை மறைப்பதற்கான முயற்சி நடக்கிறது. இனப்படுகொலையைப்பற்றிய பேச்சே எங்கும் எழக்கூடாது. விசாரணையே கூடாது என்று இலங்கை அரசு நினைக்கின்றது என்று தெரிவித்தார்.
மலேசியாவில் அனுமதி மறுக்கப்பட்டது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது;
வைகோ பேராசிரியர் இராமசாமி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை அரசைக் கடுமையாகக் குற்றம் சாட்டி, மொரீசியஸ் நாட்டின் பிரதமரையே காமன்வெல்த் மாநாட்டுக்கு இலங்கைக்குப் போகவிடாமல் தடுத்து நிறுத்தினார். இன்றைக்கு உலகில் ஒரு பெரிய பொறுப்பில் இருக்கின்ற தமிழர் பேராசிரியர் இராமசாமி தான். அவர் இந்தியாவுக்குள் நுழையக்கூடாது என்று ஏழு ஆண்டுகள் தடுத்து வைத்து இருந்தார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்துச் சொன்னேன். பேராசிரியர் இராமசாமியின் பூர்வீகம் தமிழ்நாடு. மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத் துணை முதல்வராக இருக்கின்றார். அவர் ஒரு பேராசிரியர், கல்விமான். அவரை இந்தியாவுக்கு வர விடாமல் தடுத்து வைத்து இருக்கின்றார்கள். இராஜபக்சே இந்தியாவுக்கு வருகிறார். இவர் ஏன் வரக்கூடாது? எனவே நீங்கள் அனுமதி தாருங்கள் என்று கேட்டேன். அனுமதி கொடுத்தார்.
ஆனால், ஒன்பது ஆண்டுகளாக நான் என் மகளையோ பேத்திகளையோ பார்க்க அமெரிக்காவுக்குப் போக முடியவில்லை. இதுவரையிலும் எனக்கு விசா தரவில்லை.நீங்கள் வாங்கித் தாருங்கள் என்று பிரதமரிடம் கேட்டது இல்லை. கேட்டால், செய்து கொடுத்து இருப்பார்கள். எனக்கு விசா இல்லை என்பதை நான்அதிகமாகச் சொல்லிக் கொள்வது இல்லை. இன்றைக்கு அதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்து இருக்கின்றது.
இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து ஒரு பொது விசாரணை வேண்டும், சர்வதேச விசாரணை வேண்டும், ஐ.நா. பொதுச்சபையில் விசாரிக்க வேண்டும் என்ற குரல் எங்குமே எழக்கூடாது என்று இலங்கை அரசாஙகம் நினைக்கின்றது. என்று கூறினார்.