
சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கும் பணியின்போது ஜா கட்டர் இயக்குபவர் மீது அந்த வாகனம் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் 'தி சென்னை சில்க்ஸ்' கட்டடத்தில் கடந்த 31-ம் தேதி அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் 7 மாடியும் முற்றிலும் சேதம் அடைந்தது. நகைக் கடையின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளன.
இதற்கிடையில், விபத்துக்குள்ளான கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த 2-ம் தேதி தொடங்கப்பட்டது. ஜா கட்டர் எனப்படும் நவீன எந்திரத்தின் மூலம் கட்டடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணி 9 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கட்டிடத்தை இடிக்கும்போது புழுதி பறந்ததால், சுற்றிலும் துணியால் தடுப்பு அமைக்கப்பட்டு பணி நடந்து வந்தது.
இந்நிலையில் வழக்கம்போல் இன்று கட்டத்தை இடிக்கும் பணியில் ஜா கட்டர் இயக்கும்போது, அந்த எந்திரம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
இந்த விபத்தில் ஜா கட்டரை இயக்கியவர் எந்திரத்தின் கீழ் சிக்கி பரிதாபமாக உயிழந்தார்,
இது குறித்து தகவலறிந்த காவல் துறையினரும், .தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த சரத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தற்போது ராயப்பேட்டை மருத்துவமனை கொண்டு வரப்பட்டுள்ளது.