பெற்றோர்களே அலர்ட்..சிறார்களுக்கு தடுப்பூசி..சொன்னப்படி ஜனவரி 3 ல் தொடக்கம்.. வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..

By Thanalakshmi VFirst Published Jan 1, 2022, 7:55 PM IST
Highlights

15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சிறார்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ள நிலையில் தமிழகத்தில் அத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்க உள்ளார். சென்னை போரூரில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்க உள்ள நிலையில், அதே நாளில் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்  அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தகுதியான மாணவர்களை கணகெடுக்க வேண்டும். அதற்காக ஆசிரியர் ஒருவரை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி நிர்வாகமும், சுகாதாரத்துறையும் இணைந்து பள்ளிகளில் முகாம் அமைத்து தடுப்பூசியை மாணவர்களுக்கு செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று 15-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்பதிவு துவங்கியது. கோவின் இணையதளத்தில் ஆதார், பாஸ்போர்ட், பள்ளி அடையாள அட்டை பயன்படத்தி முன்பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட வழிக்காட்டு நெறிமுறையில், 2007ம் ஆண்டு அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த அனைத்து சிறார்களும், ஜனவரி 3-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை மட்டுமே செலுத்த வேண்டும் எனவும், சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு வரும் 1ம் தேதி தொடங்கும் எனவும் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டிருந்தது.

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,431 ஆக அதிகரித்துள்ளது.ஒமைக்ரான் பாதிப்பை பொறுத்தவரை மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 454 பேருக்கும், அடுத்தபடியாக டெல்லியில் 320 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 120 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இந்தியாவின் 23 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் 22,775 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் 3,48,61,579 பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 8,949 பேர் குணமடைந்துள்ளனர். நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.32% என்றளவில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 406 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,81,486 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 145கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று 1,155 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று 1,489 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒரே நாளில் 682 பெருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

click me!