அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் - மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு...

Asianet News Tamil  
Published : Mar 06, 2018, 09:36 AM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் - மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு...

சுருக்கம்

Upgrade basic facilities at Government Hospital - petition to District Revenue Officer

பெரம்பலூர் 

பெரம்பலூரில் அரசு தலைமை மருத்துவமனையில் இருக்கை வசதி, குடிநீர்வசதி என அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமை வகித்தார். இதில் மக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 201 மனுக்கள் பெறப்பட்டன. 

இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு மாவட்ட வருவாய் அதிகாரி உடனே உத்தரவிட்டார்.

இதில், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மருத்துவ உதவிக்கு 24 மணிநேரமும் 104 என்கிற எண்ணுக்கு அழைப்பது குறித்து துண்டுபிரசுரம் மக்களுக்கு வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  

இந்த கூட்டத்திற்கு வந்த பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா பெரிய வெண்மணியை சேர்ந்த வரதராஜன் அளித்த மனுவில், “பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை செய்ய வரும் கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு சரியான தகவல் கூறாமல் அலைக் கழிக்கின்றனர். 

அந்த மருத்துவமனையில் இருக்கை வசதிகள் போதியளவில் இல்லாததால் வளாகத்தில் ஆங்காங்கே மக்கள் அமர வேண்டியிருக்கிறது. 

எனவே, இருக்கை வசதி, குடிநீர்வசதி என அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்” என்று அதில் கூறியிருந் தார். 

அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட வருவாய் அதிகாரி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.

இந்தக் கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மனோகரன், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்