பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நாளை பிறக்கவுள்ள குழந்தைகளுக்கு 2 கிராம் தங்க மோதிரம், 720 கிலோ மீன் வழங்கப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பிறந்தநாள்
குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி சிறப்பாக செயல்பாட்டதால், தேசிய பாஜக அவரை கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது, இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பாஜக மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மோடி பிரதமரானார். தற்போது அவர் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். மோடியில் 8 ஆண்டு சாதனைகளை கூறி பாஜகவினர் அடுத்து வரும் தேர்தலுக்கு இப்போதே பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்திற்கு 4 முதலமைச்சர்கள்..? யார்? யார்? தெரியுமா..? திமுக அரசை இறங்கி அடித்த இபிஎஸ்
பிறந்த குந்தைகளுக்கு தங்க மோதிரம்
இந்தநிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பிரதமர் மோடியின் பிறந்தாள் உற்சாகமாக கொணாடப்படவில்லை. இந்தநிலையில் பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாட பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தமிழக பாஜக சார்பாக பல்வேறு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் தனியார் மருத்துவமனையில் நாளை பிறக்கவுள்ள குழந்தைகளுக்கு தலா 2 கிராம் மோதிரம் வழங்க இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனையில் நாளை 10 முதல் 15 குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்ப்பதாகவும் பாஜகவினர் கூறியுள்ளனர்.
720 கிலோ மீன் விநியோகம்
மேலும் தமிழக பாஜக சார்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் அப்பகுதி மக்களுக்கு 720 கிலோ மீன் விநியோகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பாஜகவினர் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், மோடி பிறந்த நாளில் ஸ்டாலின் கோட்டையான கொளத்தூர் தொகுதியை குறிவைத்து பாஜகவினர் களமிறங்கியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் இது போன்று பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழக பாஜக ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடதக்கது.
இதையும் படியுங்கள்
உதயநிதியை வரவேற்ற அதிமுக கொடிகள்..? கோட்டை விட்ட முத்துராமலிங்கம்..! கெத்து காட்டிய முனுசாமி...!