படிக்க தெரியாதவர்கள் தபால் அலுவலகத்திற்கு வரக்கூடாது – புதுச்சட்டம் போட்ட பெண் தபால் அலுவலர்...

First Published Nov 26, 2016, 2:37 PM IST
Highlights


தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில், படிக்கத் தெரியாதவர்கள் தபால் அலுவலகத்திற்கு வரக்கூடாது என்று கூறி வாடிக்கையாளர்களை அவதூறாக பேசிய பெண் தபால் அலுவலா் முத்துமாரியைக் கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருக்கும் தலைமை தபால் அலுவலகத்தில் தபால் அலுவலராக பணி புரியும் பெண் முத்துமாரி.

ராமசாமி, விஜயா ஆகியோர் இன்று காலை தபால் அலுவலகத்திற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளனர். தங்களுக்குத் தெரியாத தகவலை, தபால் அலுவலரான முத்துமாரியிடம் கேட்க முற்பட்டபோது படிவங்களைக் கொடுத்து படித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

அதற்கு, ராமசாமி மற்றும் விஜயா இருவரும் தங்களுக்குப் படிக்க தெரியாது என்று கூறியதும்,”படிக்க தெரியாதவர்கள் தபால் அலுவலகத்திற்கு வரக்கூடாது” என்று முத்துமாரி தனக்கென புதுச்சட்டம் ஒன்றை தெரிவித்துள்ளார்.

மேலும், ராமசாமி மற்றும் விஜயாவை அவதூறாகவும் பேசியுள்ளார். இதனைக் கண்டித்து அவர்கள் இருவரும் அலுவலகத்தின் வாசலிலே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டம் அனைவருக்கும் சமம். மக்களுக்கு வேலை செய்யதான் தங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். மக்களின் வரிப்பணம்தான் தங்களது சம்பளம் என்பதை சிறிதும் நினைவில் வைக்காமல் மக்களிடமே இதுபோன்று அவதூறகவும், கீழ்தரமாகவும் பேசிய முத்துமாரியின் செயல் கண்டிக்கத்தக்கது.

அரசாங்கமும், அரசு அதிகாரிகளும் மக்களுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர மக்களை ஏய்ப்பதாக இருக்கக் கூடாது...

click me!