
திருவள்ளூர்
திருவள்ளூரில், கட்டுப்பாட்டை இழந்த லாரி ஏறியதில் சாலையோரத்தில் படுத்துக் கிடந்த ஒன்பது பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இது தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு கிராமத்தில் லாரி மோதி ஒன்பது பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
அரக்கோணத்திலிருந்து கரி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருவள்ளூர் நோக்கி வந்துக் கொண்டிருந்தது.
அந்த லாரி, திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே வந்தபோது லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. லாரி கட்டுக்குள் கொண்டுவர ஓட்டுநர் திணறிக் கொண்டிருந்த வேளையில் சாலையோரத்தில் படுத்துக் கிடந்த ஒன்பது பசுமாடுகள் மீது எதிர்பாராத விதமாக லாரி ஏறியது. இந்த விபத்தில் அந்த ஒன்பது பசுமாடுகளும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
அதன்பின்னரும் லாரி கட்டுக்குள் வராமல் அருகில் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. பின்னர், இதுகுறித்த தகவல் மப்பேடு காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவலாளார்கள் விபத்து நடந்த இடத்தில் பசுமாடுகள் இறந்து கிடப்பதை பார்வையிட்டனர்.
பின்னர், இது தொடர்பாக லாரி ஓட்டுனர் கருப்பனை மப்பேடு காவலாளர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.