
அப்பா அழைத்தால்..ஐ ஆம் ரெடி..! இருந்தாலும் "மகேஷ்" தான் இருக்காரே...! உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்...
பிரபல நாளிதழ் ஒன்றுக்குபேட்டி அளித்த உதயநிதி ஸ்டாலின் மனம் விட்டு பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அப்போது, அரசியலுக்கு வர அப்பா அழைத்தால் வருவீர்களா? என்பிற கேள்விக்கு....அவர் அழைக்க மாட்டார். ஒரு வேளை அழைத்தால் வர தயார் என தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் தன்னுடைய நண்பர் அன்பில் மகேஷ் அப்பாவுடன் இருக்கிறார். அவர் இருந்தாலே போதும்... நான் இருந்தால் என்ன.... என் நண்பர் இருந்தால் என்ன என்று நட்பையும் வெளிப்படுத்தி உள்ளார்.
படங்கள் பற்றி பேசும் போது....
நான் நடித்த எந்த படமும் பல போராட்டத்திற்கு பிறகு தான் வெளிவருகிறது.. இதுவே ஒரு அரசியல் தான் என்று நகைச்சுவையாக தெரிவித்து உள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவீர்களா ..?
ஒரு கல் ஒரு கண்ணாடி படம் ஒரு வேளை தோல்வி அடைந்து இருந்தால், நான் சினிமா விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கலாம்..ஆனால் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது படங்களில் கொஞ்சம் பிசியாக உள்ளேன் என்று தெரிவித்து உள்ளார் ..
படம் நடிப்பதற்கு முன்,தேர்தலின் போது ஒட்டு சேகரிக்க சென்றுள்ளேன்.....தற்போது நண்பர் அன்பில் மகேஷ்காக ஒட்டு கேட்டேன் என மேலும் தம் நட்பை பற்றி தெரிவித்துள்ளார்.
ஆக மொத்தத்தில் தேவைபட்டால் கட்சி தொண்டாற்ற உதநிதி ஸ்டாலின் வருவார் என பலர் கருத்தும் தெரிவித்து உள்ளார்.