உடன்குடியில் ஒரு “ஜோக்கர்”; சாலையில் தேங்கிய நீரில் குளித்து விநோத போராட்டம்…

 
Published : Jan 31, 2017, 10:42 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
உடன்குடியில் ஒரு “ஜோக்கர்”; சாலையில் தேங்கிய நீரில் குளித்து விநோத போராட்டம்…

சுருக்கம்

உடன்குடி,

மழைநீர் செல்ல கால்வாய்கள் அமைக்க வேண்டும் என்று உடன்குடி சந்தை சாலையில் மழையால் தேங்கிய நீரில் குளித்து விநோத போராட்டத்தில் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டார்.

உடன்குடி சந்தையில் மழை தண்ணீர் செல்ல வழியின்றி தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மழைநீர் கால்வாய்கள் அமைக்க வலியுறுத்தி, சாலையில் தேங்கி கிடந்த தண்ணீரில் குளியல் போட்டவாறு தொழிலாளி ஒருவர் விநோத போராட்டத்தில் ஈடுபட்டார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுகிழமை இரவு முதல் அதிகாலை வரை பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

உடன்குடி பகுதியில் சற்று கனமழை பெய்தது. இதனால், உடன்குடி பிரதான சந்தை, உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் குட்டைப் போல் தேங்கியது. அந்த தண்ணீர் வெளியேற வழியின்றி ஆங்காங்கே தேங்கி கிடந்ததால், நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகினர். வாகனங்கள் சென்றதால் சாலையில் தண்ணீர் மாசுபட்டு சகதிகாடாக காட்சியளித்தது.

இதனால், அப்பகுதியில் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. மழைக்காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் வழிந்தோட கால்வாய்கள் இல்லாத காரணத்தால், சாலையின் பள்ளமான பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்குவது வாடிக்கையாகி விட்டது.

இந்த நிலையில் நேற்று காலையில் அங்கு வந்த உடன்குடி வில்லிகுடியிருப்பு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜன் (42), தேங்கி கிடந்த சகதி தண்ணீரை அகற்ற கோரி முழக்கங்கள் எழுப்பினார்.
மேலும், அந்த தண்ணீரில் குளியல் போட்டவாறு, உடனடியாக இத்தண்ணீரை அகற்ற வேண்டும் என்றும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மழை தண்ணீர் வெளியேற முறையான கால்வாய்கள் அமைக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினார்.

சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால், உடன்குடி சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து கூடி நின்றனர்.

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?