கள்ளக்காதலியை கைப்பற்றியதால் ஆத்திரம் - ஆட்டோவுக்கு தீ வைத்த டிரைவர் ஒரு மணி நேரத்தில் கைது

 
Published : Jan 31, 2017, 10:28 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
கள்ளக்காதலியை கைப்பற்றியதால் ஆத்திரம் - ஆட்டோவுக்கு தீ வைத்த  டிரைவர்  ஒரு மணி நேரத்தில் கைது

சுருக்கம்

அஷோக் நகர் உமாபதி தெருவில் வசித்து வருபவர் நாகராஜன்(43). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று இரவு 9.45 மணி அளவில் அதே தெருவில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ தீப்பற்றி எரிவதாக அவருக்கு தகவல் தெரிந்து ஓடினார்.

அதற்குள் அக்கம் பக்கமிருந்தவர்கள் ஆட்டோவில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனாலும் ஆட்டோ பாதி அளவுக்கு எரிந்து சாம்பலானது. இது பற்றி நாகராஜன் அளித்த புகாரின் பேரில் அஷோக் நகர் உதவி கமிஷனர் ஹரிகுமார் , இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர்.

அப்போது ஆட்டோ தீவைப்பதற்கு முன்னர் எரிக்கப்பட்ட ஆட்டோ அருகில் ஒரு ஆட்டோ வந்து நிற்பதும் அதில் இருந்து இறங்கும் ஓட்டுனர் கையில் பெட்ரோல் கேனை எடுத்துகொண்டு இறங்கும் காட்சியும் பதிவாகியிருந்தது.

ஆனாஅல் இருட்டாக காட்சிகள் பதிவாகி இருந்ததாலாட்டோவின் எண்ணை கண்டுபிடிக்கமுடியவில்லை. அந்த நேரத்தில் ஒரு வாகனம் அவ்வழியாக சென்றபோது அதன் ஹெட்லைட் வெளிச்சம் ஆட்டோவில் பட்டது தெரியவந்தது.

அதை வைத்து மிகுந்த சிரமப்பட்டு ஆட்டோவின் எண்ணை எடுத்த போலீசார் அதன் உரிமையாளரை பிடித்தனர். ஆனால் அவர் நான் அதை இன்னொருத்தருக்கு விற்றுவிட்டேன் என்று ஒரு முகவரியை கொடுத்தார்.

அந்த முகவரியில் சென்றால் அந்த நபரும் தற்போது ஆட்டோவை ராமாபுரம் , நரசிம்ம பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் சுப்ரா(எ)என்கிற சுப்ரமணிக்கு விற்று விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக அங்கு சென்ற போலீசார் சுப்ரமணியத்தை ஒரு மணி நேரத்தில் பிடித்தனர்.

அவரை ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து விசாரித்தபோது ஆட்டோவை எரித்ததற்கான காரணத்தை சுப்ரமணி கூறியதை கேட்ட போலீசார் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.””  சார் நான் ஓட்டிக்கிடிருந்த பெண்ணை அவன் ஓட்டிகிட்டு போய்ட்டான், அதான் அவன் ஓட்டிகிட்டிருந்த ஆட்டோவை கொளுத்தினேன்.”” 

 15 வருஷமா ஒருத்தர் மனைவியுடன் எனக்கு கள்ள தொடர்பு உள்ளது.இப்ப அந்த பெண்ணை நாகராஜ் என்னிடமிருந்து தட்டிட்டு போய்ட்டான் சார். அவன் ஆட்டோ சூப்பரா இருக்கும் சார், சொந்த ஆட்டோ அதை வைத்து தானே இந்த ஆட்டம் போடுகிறாய் என்ற கோபத்தில் இருந்தேன்.

நேற்று டாஸ்மாக் பாரில் மது அருந்தும் போது நண்பர்கள் இதை சொல்லி கிண்டல் அடித்தனர் இதனால் ஆத்திரத்தில் கேனில் பெட்ரோல் வாங்கி கொண்டு வந்து ஆட்டோ மீது ஊற்றி தீ வைத்து விட்டு சென்று விட்டேன் .

யாரும் பார்க்கவில்லை என்று நினைத்தேன். ஆனால் அங்கு இருந்த சிசிடிவி கேமரா என்னை மாட்டிவிட்டு விட்டது என்று கூறியுள்ளான்.

ஆட்டோவை எரித்த ஒரு மணி நேரத்தில் கண்காணிப்புகேமரா உதவியுடன் குற்றவாளியை போலீசார் பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுப்ரமணி மீது  பிரிவு 436 IPC. And 3 of TNPPD&L ACT. ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த உதவி கமிஷனர் ஹரிகுமார் , இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான தனிப்படையினரை கமிஷனர் பாராட்டியுள்ளார்.

துணை ஆணையர் சரவணன் வழிகாட்டுதலின் கீழ் எங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தி இதுவரை செயின் பறிப்பு , வீடு புகுந்து திருடுவது உட்பட 15 குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்துள்ளோம் என்று உதவி கமிஷனர் ஹரிகுமார் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?