தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான அட்டவணை வெளியீடு! பிப்ரவரி 23 முதல் தொடக்கம்!

Published : Dec 30, 2025, 09:11 PM IST
tnpsc

சுருக்கம்

தமிழக தொழில்நுட்பக் கல்வித் துறை, 2026 பிப்ரவரி மாத தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட தொழில்நுட்பத் தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின் கீழ் பாரம்பரிய மற்றும் கணினி வழியில் தேர்வுகள் நடத்தப்படும். 

தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகின்றன. அதாவது பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுகின்றன. இந்நிலையில் தமிழக தொழில்நுட்பக் கல்வித் துறை சார்பில் 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து உள்ளிட்ட தொழில்நுட்பத் தேர்வுகளுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தட்டச்சு தேர்வுகள்

இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பு: தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல், அரசு கணினி சான்றிதழ் தேர்வு (COA) ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின்கீழ் பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுகள் ஏற்கனவே இருந்து வரும் பாரம்பரிய முறையிலும், கணினிவழி முறையிலும் நடத்தப்படும். பாரம்பரிய வழிமுறையிலான சுருக்கெழுத்து தேர்வு பிப்ரவரி 7 மற்றும் 8ம் தேதியும், கணக்கியல் தேர்வு பிப்ரவரி 9ம் தேதியும் தட்டச்சு தேர்வுகள் பிப்ரவரி 14 மற்றும் 15ம் தேதியும் நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?

அதேபோல், கணினி வழியிலான தட்டச்சு தேர்வு, சுருக்கெழுத்து தேர்வு மற்றும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு பிப்ரவரி 23 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி ஜனவரி 19ம் தேதி முடிவடையும். தேர்வர்கள் https://tndtegteonline.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முடிவுகள் எப்போது?

தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30ம் தேதி வெளியிடப்படும். தேர்ச்சி பெற்றவர்கள் டிஜிட்டல் சான்றிதழ்களை (e-certificates) மே 27 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் திமுகவினால் 25 இடங்கல் கூட வெற்றிபெற முடியாது ! நிர்மல் குமார் பேட்டி
எவ்வளவு சொல்லியும் கேட்காத அக்கா! ஆத்திரத்தில் தம்பி! அலறிய சுமித்ரா! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!