இராமநாதபுரதத்தில் டெங்குவால் இரண்டு வயது சிறுமி பலி; பெற்றோர், உறவினர்கள் சோகம்…

Asianet News Tamil  
Published : Oct 17, 2017, 08:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
இராமநாதபுரதத்தில் டெங்குவால் இரண்டு வயது சிறுமி பலி; பெற்றோர், உறவினர்கள் சோகம்…

சுருக்கம்

Two year old girl dies in Ramanathapuram Parents and relatives sad ...

இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த இரண்டு வயதுச் சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டிணம் அருகே உள்ளது மணமேல்குடி கிராம, இங்கு அகமது தானிஷ் மகள் மகதீமா பேகம் (2) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உடனே அவர் இராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். பின்னர் அங்கிருந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் மகதீமா பேகம்.

இந்த நிலையில் நேற்று அச்சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு வயது சிறுமி டெங்குவுக்கு பலியான சம்பவம் அவரது உறவினர்களிடமும், அப்பகுதி மக்களிடமும் பெரும் சோகத்தை எழுப்பியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

TVK Vs CPM: ஆதரவை வாபஸ் பெறுவோம்.. தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை!
CM Vijay Vs PM Modi: ஆபத்து! தமிழ்நாட்டிற்கு உடனே வேணும்.. விவசாயிகளுக்காக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பரபரப்பு கடிதம்