வேலூரில் இரயில் மோதி இருவர் உயிரிழப்பு; அடையாளம் தெரியாததால் போலீஸ் தீவிர விசாரணை...

Asianet News Tamil  
Published : Feb 17, 2018, 08:21 AM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
வேலூரில் இரயில் மோதி இருவர் உயிரிழப்பு; அடையாளம் தெரியாததால் போலீஸ் தீவிர விசாரணை...

சுருக்கம்

Two killed in train accident in Vellore Police intense investigation...

வேலூர்

வேலூரில் இரு வெவ்வேறு இடங்களில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இருவர் இரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே குடியாத்தம் - வளத்தூர் இரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். அவர், சந்தன நிறத்தில் சட்டையும், கருப்பு நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தார்.

காட்பாடி - லத்தேரி இரயில் நிலையங்களுக்கு இடையே 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் இறந்து கிடந்தார். அவர், கருப்பு நிறத்தில் பனியனும், நீல நிற பேண்ட்டும் அணிந்திருந்தார்.

இவர்கள் இருவரைப் பற்றியும் வேறு எந்த தகவலும் கிடைக்காததால் இந்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை இரயில்வே காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு சடலங்களையும் மீட்டு, உடற்கூராய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இரயில் மோதியதில் இருவரும் இறந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது.

மேலும், இதுகுறித்து இரயில்வே காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை தொடர்ந்து வருகின்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

சங்கே முழங்கு.. 2026-ல் பாருங்க! சங்கி குழுவுடன் தமிழ்நாடே இணையப் போகுது.. தமிழிசை சவால்!
பராசக்தி படம் எப்படி இருக்கு? கனிமொழி கொடுத்த ‘பளீச்’ பதில்!