ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் பணியிட மாற்றம்!

Published : Feb 12, 2024, 07:24 PM ISTUpdated : Feb 12, 2024, 07:52 PM IST
ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் பணியிட மாற்றம்!

சுருக்கம்

ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் நிர்வாகக் காரணங்களுக்காக அவ்வப்போது ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.  அந்த வகையில், ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

அதன்படி, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக  பணியாற்றி வந்த டி.மோகன் ஐ.ஏ.எஸ் முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த டாக்டர். வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ்  செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ், கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவருக்கு பதிலாக டி.மோகன் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, டி.மோகன் வகித்து வந்த செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் பதவிக்கு டாக்டர். வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ்  நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா: பிரதமரை நேரில் சந்தித்து குடும்பத்தினர் நன்றி!

முதலமைச்சரின் தனிப்பிரிவு, உங்கள் தொகுதியில் முதல்வர் உள்பட முதல்வரின் குறைதீர் துறைகளை ஒருங்கிணைத்து ‘முதல்வரின் முகவரி’ என்று ஒரு புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த துறை செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துக்கு ரெடியா?.. 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா'.. தேதி குறித்த அரசு!
பேச்சுவார்த்தையில் ஏமாற்றம்.. ஜன. 6 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் உறுதி!