
சேலம்
சேலத்தில் சாலையோரம் இருந்த புளிய மரம் திடீரென தீப்பிடித்ததால் சேலம் - ஆத்தூர் நெடுஞ்சாலையில் இரண்டி மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் தீப்பிடிக்க காரணம் என்ன என்பது விசாரணை நடக்கிறது.
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் முக்கிய கடை வீதியில் சேலம் - ஆத்தூர் நெடுஞ்சாலை உள்ளது.
இந்தச் சாலையில் உள்ள ஒரு புளிய மரம் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. அதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து சேலம் தீயணைப்புத் துறையினருக்கு உடனே தகவல் கொடுத்தனர்.
அதனையடுத்து, நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தொடர்ந்து மூன்று மணி நேரங்கள் போராடி தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், அப்போதும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறினர்.
பின்னர், மரக் கிளைகளை அறுத்து அப்புறப்படுத்தி தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
புளியமரம் திடிரென தீப்பிடிக்க என்ன காரணம் என்பது எகுறித்து, சேலம் அம்மாப்பேட்டை காவலாளர்கள், வாழப்பாடி வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.