
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே சாலையை கடக்க முயன்ற போது கார் மோதியதில் 2 கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீழப்பழூரை சேர்ந்தவர் மாணவி இலக்கியா மற்றும் திண்டுக்கல் மரியநாதபுரத்தை சேர்ந்தவர் மாணவி சென்சியாராணி.
இவர்கள் இருவரும் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இதையடுத்து கடந்த 4 விடுமுறையை ஊரில் கழித்துவிட்டு இன்று மாலை மீண்டும் கல்லூரிக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், சிறுகனூர் அருகே இருவரும் சாலையை கடக்க முயன்றபோது மிக வேகமாக வந்த கார் மோதியதில், 2 மாணவிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்த மாணவிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.