தூத்துக்குடி பெரியசாமி உடலுக்கு அதிமுகவினர் அஞ்சலி… ஜெ உயிரோடு இருந்திருந்தால் இது முடியுமா? துளிர்க்கும் நாகரீகம் ..

 
Published : May 28, 2017, 11:24 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
தூத்துக்குடி பெரியசாமி உடலுக்கு அதிமுகவினர் அஞ்சலி… ஜெ உயிரோடு இருந்திருந்தால் இது முடியுமா? துளிர்க்கும் நாகரீகம் ..

சுருக்கம்

tuticorin periyasamy death

 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மறைந்த பெரியசாமியின் உடலுக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ எஸ்,பி,சண்முக நாதன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். திமுகவினர் வீட்டு சாவுக்கு அதிமுகவினரா என அங்கிருந்தவர்கள் ஆச்சரியமடைந்த அதே வேளையில் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா என கேள்வி எழுப்பினர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்,பெரியசாமி. நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் மரணமடைந்தார். அவரது உடல் தூத்துக்குடியில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அ.இ.அ.தி.மு.க. புரட்சித்தலைவி ஜெயலதா அணியைச் சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார், இந்த காட்சியைப் பார்த்த அங்கிருந்தவர்கள் திமுகவும், அதிமுகவும் ஒரே வீட்டிலா என ஆச்சரியப்பட்டு போனார்கள். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இது போன்ற அரசியல் நாகரீகமான செயல்கள் நடந்திருக்குமா என கேள்வி எழுப்பினர்

சண்முக நாதனுடன், தூத்துககுடி மாவட்ட அதிமுக  இலக்கிய அணி செயலாளர் நடராஜன் பகுதி கழக செயலாளர் பொன்ராஜ் ஒன்றிய செயலாளர் இராமச்சந்திரன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆறுமுகநயினார்   செபத்தையாபுரம் குணசேகரன் மாநகர மேற்கு பகுதி அவைத்தலைவர் சந்தனம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யா லெட்சுமணன்  மேற்கு பகுதி துணைச் செயலாளர் கணேசன்  வழக்கறிஞர்கள் கோமதி மணிகண்டன் 3ம் மைல் செல்வக்குமார் மாவட்ட பிரதிநிதி வக்கீல் முனியசாமி மீளவிட்டான் சுதாகர் அருன் ஜெபக்குமார் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் தனராஜ் சுடலைமணி முபாரக்ஜான் சந்தனப்பட்டு  கே.ஏ.பி. ராதா கேடிசி ஆறுமுகம் பாலஜெயம் சாம்ராஜ் உலகநாத பெருமாள் வெங்கடேஷ் போல்டன் புரம் அருன் சகாயராஜா விக்னேஷ் உட்பட பலர். இருந்தனர்.

 

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!