
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை, பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக சந்தித்து, அவர்களது குறைகளை களைய வேண்டும் என அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், இன்று, தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், டெல்லியில் தமிழக விவசாயிகள், ஆடைகளை களைந்து போராடியது, ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் ஈட்டியை பாய்ச்சியது போல் வலி ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளை உடனடியாக சந்தித்து அவர்களது குறைகளை களைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
28 நாட்களாக டெல்லியில் ஜீவப் போராட்டம் நடத்தியும், தமிழக விவசாயிகளை பிரதமர் தொடர்ந்து புறக்கணித்து வருவது வேதனையளிப்பதாகவும் டிடிவி. தினகரன், குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளை பிரதமர் சந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.