மறக்க முடியாத “சுனாமி" - இன்று 12ம் ஆண்டு துக்கம்

Asianet News Tamil  
Published : Dec 25, 2016, 10:26 AM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
மறக்க முடியாத “சுனாமி" - இன்று 12ம் ஆண்டு துக்கம்

சுருக்கம்

கடந்த 2004ம் ஆண்டு 26ம் தேதி சுனாமி பேரிடர் சம்பவம் ஏற்பட்டது. இதனால் சென்னை, மாமல்லபுரம், பழவேற்காடு, காசிமேடு, திருவொற்றியூர், புதுச்சேரி, கோவளம், கன்னியாகுமரி உள்பட கடலோர மாவட்டங்கள் அனைத்து மூழ்கின. லட்சக்கணக்கானோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் மாயமானார்கள்.

சுனாமி என்னும் ஆழி பேரலை நிகழ்ந்து 12 ஆண்டுகள் ஆனபிறகும், நமக்கு நேற்று நடந்தது போல்வே தோன்றுகிறது. இதில், லட்சக்கணக்கான மக்கள் உடமைகளையும், பொருட்களையும், உறவினர்களையும் இழந்து இன்றும் தவிக்கின்றனர்.  சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றும் மீளமுடியாத துயரில் உள்ளனர்.

சுனாமி ஆழி பேரலையால் இறந்தவர்களுக்கான அஞ்சலி செய்யும் நிகழ்ச்சி இன்று அனைத்து கடற்கரை பகுதியிலும் நடக்கிறது.

ஆழி பேரலையில் சிக்கிய இறந்தவர்களுக்கு அவர்களது உறவினர்களும், நண்பர்களும் கடற்கரை பகுதிக்கு சென்று, கடலில் மலர் தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்துகின்றனர். இதேபோல் அனைத்து கட்சியினர் சார்பிலும், அரசு சார்பிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்
சிக்கன் விலை உச்சம்.. விஸ்வரூபமெடுத்த கறிக்கோழி விவசாயிகள் பிரச்சனை.. முக்கிய குழு அமைத்த அரசு!