சிக்கியது 50 கிலோ தங்கம் - குருமூர்த்தி வீட்டில் ஐடி அதிரடி...!!!

Asianet News Tamil  
Published : Jul 21, 2017, 01:51 PM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
சிக்கியது 50 கிலோ தங்கம் - குருமூர்த்தி வீட்டில் ஐடி அதிரடி...!!!

சுருக்கம்

Trapped 50 kilo Gold Gurumurthi house id is in action

நெடுஞ்சாலை தலைமை பொறியாளராக இருந்து ஓய்வு பெற்ற குருமூர்த்தி வீட்டில், வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 50 கிலோ தங்கம் மற்றும் 50 லட்சம் ரூபாய் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சாலை ஒப்பந்ததாரர் தியாகராஜன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவரின் தந்தையும், நெடுஞ்சாலை தலைமை பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவருமான குருமூர்த்தி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

சாலை ஒப்பந்ததாரர் தியாகராஜன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வருத்துறையினர்  நடத்திய சோதனையில் 22 கிலோ தங்கம் மற்றும் 41 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சாலைப்பணி ஒப்பந்ததாரர் தியாகராஜனின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசின் சாலைப்பணி ஒப்பந்ததாரராக தியாகராஜன் இருந்து வருகிறார். இவர் மீது வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாகவும், வருமானத்தை குறைத்து காண்பித்ததாகவும் புகார் ஏழுந்தது. 

இந்த புகாரை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள், சென்னையில் உள்ள தியாகராஜனின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் முதல் சோதனை நடத்தினர். சோதனையில் 22 கிலோ தங்கம் மற்றும் 41 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்
செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தியாகராஜனின் தந்தை குருமூர்த்தி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனையின்போது 50 கிலோ தங்கம் மற்றும் 50 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். குருமூர்த்தி வீட்டில் மேலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

23 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! எந்த மாவட்டங்களில் கனமழை தெரியுமா?
Tamil News Live today 25 January 2026: Pandian Stores 2 Promo - சக்திவேலின் திட்டம் பலித்தது! பாண்டியன் குடும்பத்தில் வெடித்த புது பஞ்சாயத்து! பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி வரும் வாரங்கள் ரணகளம்!