திருவண்ணாமலையிலிருந்து கிளாம்பாக்கத்திற்கே பஸ் செல்லும்.! எந்த எந்த வழித்தடம்.? -போக்குவரத்து கழகம் அறிவிப்பு

By Ajmal KhanFirst Published Jan 29, 2024, 2:09 PM IST
Highlights

தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், திருவண்ணாமலைக்கு செல்லக்கூடிய பேருந்தும் இனி கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிளாம்பாக்கம் டூ திருவண்ணாமலை

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப போக்குவரத்து சேவையும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில், முன்பு பாரிமுனையில் இருந்த பேருந்து நிலையம் கோயம்பேடு பகுதிக்கு மாற்றப்பட்டது. தற்போது கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே திருவண்ணாமலைக்கு செல்லக்கூடிய பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரணி, வந்தவாசி, செய்யாறு, போளூரில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என திருவண்ணாமலை மண்டல் பொது மேலாளர் அறிவித்துள்ளார். 

Latest Videos

கிளாம்பாக்கத்தில் இருந்தே பேருந்துகள் புறப்படும்

இதனிடையே கிளாம்பாக்கத்தில் இருந்து எந்த எந்த பேருந்துகள் , எந்த ஊருக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என தகவலை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. அதன் படி தென் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் அனைத்தும்,  30.01.2024 முதல் சென்னை கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையம் ஆகியவற்றில் இருந்து கீழ்க்கண்ட அட்டவணைப்படி, காலை 06.00 மணி முதல் இரவு 22:00 மணி வரையில் அதிகப்படியான பேருந்துகளும், அதன்பிறகு பயணிகள் அடர்விற்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எந்த ஊருக்கு எத்தனை பேருந்துகள் இயக்கம்

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT) கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையத்திலிருந்து (MMBT) இயக்கப்படும் வழித்தடங்கள் மற்றும் பேருந்து புறப்பாடுகள் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:


கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் 30/01/2024 முதல் இயக்கப்பட மாட்டாது. மேற்கண்ட பேருந்து இயக்க மாற்றத்தினால் பயணிகளின் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி செல்லும்போது தாம்பரம் வரை இயக்கப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா.? சென்னையின் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமையுங்கள்- அன்புமணி

click me!