
திருநெல்வேலி
அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கான இந்த மாத ஓய்வூதியத்தையும் தமிழக அரசு வழங்கவில்லை என்பதால் அதனைக் கண்டித்து நாளை (ஏப்ரல் 7) போராட்டத்தில் இறங்குவது என முடிவு எடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்களுக்கு மாதந்தோறும் 1-ஆம் தேதி ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
கடுமையான நிதி தட்டுப்பாட்டு என்று கூறி போக்குவரத்துக் கழக ஓய்வூதியதார்களுக்கு கடந்த சில மாதங்களாக ஓய்வூதியங்கள் வழங்காமல் இருக்கிறது தமிழக அரசு.
கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம், தொடர் போராட்டங்களுக்குப் பிறகு மார்ச் 28-ஆம் தேதி வழங்கப்பட்டது.
ஆனால், ஏப்ரல் மாதத்துக்கான ஓய்வூதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர் ஓய்வூதியர்கள்.
எனவே, ஓய்வூதியங்களை பிரதி மாதம் 1-ஆம் தேதி வழங்க வேண்டும் என்ரு வலியுறுத்தி வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு நாளை (ஏப்ரல் 7) போராட்டம் நடத்தப்படும் என டி.என்.எஸ்.டி.சி. ஓய்வுபெற்றோர் அனைத்து சங்க கூட்டமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.