சேலத்தில் செய்தியாளர்களையும் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தற்போதைய அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் விளம்பரங்களிலும் சமூக வலைத்தள ‘ரீல்ஸ்களிலும்’ மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மேலும், தேர்தலில் அளித்த முக்கியமான வாக்குறுதிகள் எதையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை என்றும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்