
தமிழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார் தூத்துக்குடியை சேர்ந்த கிரேஸ் பானு.
திருநங்கைகள் என்றாலே ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்று கருதிய காலகட்டம் தமிழகத்தில் நிலவி வந்தது. அவர்களுக்கான அங்கீகாரம் கடந்த 2014 ஆம் ஆண்டு தான் உச்சநீதிமன்றம் வழங்கியது.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், சிக்ரி ஆகியோர் பிறபித்த உத்தரவில் திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மத்திய மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
இந்த உத்தரவை செயல்படுத்த கோரி சென்னை செயின்ட் சார்ஜ் கோட்டை அருகே தொத்துகுடியை சேர்ந்த திருநங்கை கிரேஸ் பானு போராட்டத்தில் ஈடுபட்டது அனைவரும் தெரிந்ததே.
இதைதொடர்ந்து தனது உயர்நிலை கல்வியை முடித்த கிரேஸ் பானு கோவில் பட்டியில் டிப்ளோமோ பட்டபடிப்பில் சேர்ந்தார்.
94 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தும் அவருக்கு அரசு சீட்டு கிடைக்கவில்லை என்பதால் தனியார் கல்லூரியில் EEE பொறியியல் பட்ட படிப்பு படிக்க இடம் கிடைத்தது.
தனக்கு உதவி கரம் நீட்டிய நண்பர்களின் உதவியோடு தமிழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார் கிரேஸ் பானு.
சாதனைக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவரது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.